Take a fresh look at your lifestyle.

பிரதான பாதையினை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த போராட்டம்

 

தென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்திற்கு கிரான் பிரதான சந்தியில் இருந்து செல்லும் பிரதான பாதையினை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இரண்டு மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று (21) புதன்கிழமை ஈடுபட்டனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட இரண்டு மணிநேர வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுடைய போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது குன்றும் குழியுமாக இருக்கும் பாதை சீர்செய்யப்படாமல் இருப்பது ஏன்?, சீரான பொது போக்குவரத்து நடைமுறைப்படுத்த ஆவண செய், வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்த முயற்சி செய், மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதான வீதிகளும் புனரமைக்கப்பட்ட நிலையில் புலிபாய்ந்தகல் பாலமும் வீதியும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.