அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா! ஒத்துழைப்பு கொடுத்த அதிமுக.!

breaking
சசிகலாவுக்கு அத்திவரதரை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கலனாலும் சிறப்பு அலங்காரம் செய்ய சசி தரப்புக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, நேரில் தான் சசிகலா வர முடியவில்லை. மத்த படி சசி தரப்பிலான சிறப்பு அலங்காரங்கள் பூசைகளுக்கு குறைவில்லை. கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 16-வரை கிடந்த கோலத்திலும் எழுந்த கோலத்திலும் காட்சி கொடுத்த அத்திவரதரை ஏறத்தாழ 1 கோடி பேர் தரிசனம் பண்ணியிருக்காங்க. இதைத் தொடர்ந்து 17-ந் தேதி நள்ளிரவு 11:55-க்கு அத்திவரதர் அங்குள்ள திருக்குளத்தில் பழையபடி நீருக்குள் கிடத்தப்பட்டிருக்கார். இனி 40 வருடம் கழித்து 2059-ல் தான் அவரைப் பார்க்க முடியுமாம். இந்த முறை தரிசனத்தின் கடைசி நாட்களில் செம கூட்டம் இருந்தது. அதனால் பக்தர்கள் நிழலில் நின்றபடி வரிசையா வருவதற்கு வசதியா 2 கி.மீ. தூரத்துக்குப் பந்தல் போடப்பட்டது. அதுவரை 3 வரிசையில் அனுப்பப்பட்ட பக்தர்கள், 5 வரிசையில் அனுமதிக்கப்பட்டாங்க. சாம்பிராணியை தைலம் போல காய்ச்சி அத்திவரதருக்குப் பூசி, நீல நிற பட்டாடையில் துளசி பட்டாடையுடன் அவர் காட்சியளித்தார். இந்தப் பந்தல், பட்டாடை, மற்ற அலங்காரங்கள் எல்லாமே சசிகலா செலவுதானாம். அத்திவரதருக்கு செய்த சிறப்பு அலங்காரம் மூலம் தனக்கு அனுக்கிரகம் கிடைத்து சீக்கிரம் ரிலீஸ் ஆயிடலாம்னு சசி நினைக்கிறாராம். மேலும் சசிகலா தரப்புக்கு அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லையாம். சசிகலாவிற்கு தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று டிசம்பர் மாதம் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்களும் கூறிவருகின்றனர்.