சமூக வலைத்தளத்தால் மன்னார் இளைஞனுக்கு வந்த வில்லங்கம்.!

breaking
சமூக வலைத்தளம் ஊடாக இரு சமூகங்களுக்கடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்குடன் கருத்துக்களை பதிவு செய்தார் என்ற அடிப்படையில் அவசரகாலச் சட்டம் மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைக்கான சாசன சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் மன்னார்  நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வட தமிழீழம் ,மன்னார் காட்டாஸ்பத்திரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சமூக வலைத்தளம் ஊடாக இரு சமூகங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்குடன் கருத்துக்களை பதிவு செய்தார் என்ற அடிப்படையில் கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரக்கால சட்டத்தை பயன்படுத்தி இவ் இளைஞன் பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட இவ் இளைஞன் மூன்று மாதங்களுக்கு மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவருக்கான பிணை விண்ணப்பம் மன்னார் மேல் நீதிமன்றிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு இருக்க இந்த வழக்கானது நேற்று முன் தினம் வியாழக் கிழமை (22.08.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஐH முன்னிலையில் அழைக்கப்பட்டபோது நீதிபதி தெரிவிக்கையில் குறித்த இவ் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனையின்படி குறித்த இளைஞன் விடுதலை செய்யப்படுகின்றார் என தெரிவித்து இவ் இளைஞனை விடுதலை செய்தார். இவ் இளைஞனின் விடுதலைக்காக மன்னார் சிரேஷ;ட சட்டத்தரனி பா.டெனிஸ்வரன் மற்றும் சட்டத்தரனி செல்வராஐ; டினேசன் மன்றில் ஆஐராகி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.