Take a fresh look at your lifestyle.

காணாமற்போன இரு துப்பாகிகளும் மீட்பு.!

பாணதுறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து காணமற்போன ரி 56 துப்பாக்கிகள் இரண்டும் பொலிஸாரினால் அக்குரெஸ்ஸ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி குறித்த துப்பாக்கிகள் இரண்டும் காணாமற் போனது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 2 இராணுவ வீரர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாணதுறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட 2 துப்பாக்கிகளும் குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.