கடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகள்.!

breaking
லெப்.கேணல் முல்லைமாறன்/சோபிதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்...! தமிழீழ மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கும் பணியில் எம்.ரி மன்யோசி, எம்.வி செய்சின், எம்.வி கொசியா எனும் விடுதலைப்புலிகளின் வணிகக்கப்பல் ஈடுபட்டிருந்த வேளையில் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து 10. 09.2007 அன்று சிறிலங்கா மற்றும் வல்லரசுகள் வழிமறித்து தாக்கியதால் தம்மை தாமே கப்பலுடன் எரித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிப் போராளிகள் (ஆழக்கடலோடிகள்) லெப்.கேணல் முல்லைமாறன்(சோபிதன்) லெப்.கேணல் சென்பகச்செல்வன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் ஜது (வீமன்), லெப்.கேணல் எரிமலை (கபிலன்), ஆகிய கடற்புலி மாவீரர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்   தாயக மக்களுக்குரிய அத்தியாவசிய வளங்கள் ஏற்றிப் பயணித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல் பகைவனின் முற்றுகைக்குள் உள்ளான வேளை பகைவனிடம் சரணாகதி அடையாமல் தங்களால் முடிந்தவரை களமாடி தமிழீழத்தின் விடயங்களைப் பாதுகாத்து கப்பலுடன் தங்களைத் தாங்களே எரிவாயுக் கலன் கொண்டு எரித்து கப்பலை வெடிக்கவைத்து கடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகளின் வரலாற்று நிகழ்வு...! உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார்.மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின .இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்க சயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள்.முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர் கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் .இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாது இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார்.அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டாரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் . இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள். "எம்.ரி. மன்யோசி" (M.T. Manyoshi) எண்ணெய்க் கப்பல் மற்றும் "எம்.வி. செய்ஸின்" (M.V. Seishin), "எம்.வி. கொசியா" (M.V. Koshia) ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளையில் 11.09.2007 அதிகாலை வரை ஏற்பட்ட மோதலில் தமது கப்பல்களை எரித்தும் - மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் வேங்கை, கடற்புலி லெப். கேணல் திருவருள், கடற்புலி லெப். கேணல் எரிமலை / கபிலன், கடற்புலி லெப். கேணல் செண்பகச்செல்வன், கடற்புலி லெப். கேணல் எழில்வேந்தன், கடற்புலி லெப். கேணல் முல்லைமாரன் / சோபிதன், கடற்புலி லெப். கேணல் ஐது / வீமன், கடற்புலி லெப். கேணல் சிறீகாந்த், மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன், கடற்கரும்புலி நிதர்சன், கடற்புலி கர்ணன், கடற்புலி பிரியன், கடற்புலி கலைச்செல்வன், கடற்புலி தமிழ்நம்பி, கடற்புலி புலிக்குட்டி, கடற்புலி ஜெயா, கடற்புலி குன்றன், கடற்புலி கீதன், கடற்புலி தென்னவன், நாட்டுப்பற்றாளர் தங்கன் / தங்கம் (இவர் லெப். கேணல் அன்புக்குமாரனின் சகோதரர்) இவர்களே கடலிலே காவியம் படைத்து கடலன்னை மடியில் வீரகாவியமானார்கள். தாயக விடுதலை வேள்வி தன்னில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். என்றும் நினைவுகளுடன் அலையரசி