சிங்கள சேவகன் முரளிக்கு பகிரங்க சவால் விடுக்கும் சுதேச மக்கள் கட்சி.!

breaking
தனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி வேண்டுமென பேசத்தயாராவென கேள்வி எழுப்பியுள்ளது சுதேச மக்கள் கட்சி.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடந்த அக்கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் மதிராஜ் கருத்து வெளியிடுகையில்
யுத்தம் ஓய்ந்து போன 2009 மே மாதம் தான் தனது மகிழ்ச்சியான நாளென முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.அவர் தனது எஜமான் முன்னிலையில் இதனை தெரிவித்திருக்கிறார்.இவ்வாறு தெரிவிக்க அவருக்கு தேவைகள் இருக்கின்றது.
அவரது கருத்து தொடர்பில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமது கடும் எதிர்வினைகளை ஆற்றிவருகின்றனர்.அத்துடன் அவரது பிஸ்கெட் கம்பனியும் கவிழ்ந்து போகலாமென அஞ்சப்படுகின்றது.
இதனாலேயே இப்பொழுது அவசர அவசரமாக அவர் மறுப்பு வெளியிட்டுவருகின்றார்.
நாம் பகிரங்கமாக சவால் விடுகின்றோhம்.அவர் நிம்மதி திரும்பியதாக சொல்லும் 2009ம் ஆண்டைய இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களிற்கு சர்வதேசத்திடமிருந்தோ அல்லது அவரது தற்போதைய எஜமானர்களிடமிருந்தோந்தோ நீதியை பெற்று தர முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.