ஆட்டோமொபைல் சரிவிற்கு நிர்மலா சீதாராமன் சொன்ன திடுக் காரணம்.!

breaking
ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டது என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்த பொருளாதார சரிவு ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. அசோக் லேலாண்ட், மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இதனால் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. அதேபோல் வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தையும் பிடித்து வருகிறது. இதனால் சென்னைதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 100 சாதனை குறித்து பேட்டி அளித்தார். அதில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவு குறித்து விளக்கம் அளித்தார். அவர், ஆட்டோமொபைல் துறை சரிவு பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பிஎஸ்6 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ஒரு காரணம். அதேபோல் தற்போதைய இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வாகனம் வாங்கும் ஆசை குறைந்துள்ளது . பொதுவா இளைஞர்கள் இப்போது இஎம்ஐ கட்ட விரும்புவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் ஓலா, உபரில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பலர் தற்போது மெட்ரோவை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. நாடு முழுக்க இதற்காக ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். டெல்லியில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இதற்காக பேசி வருகிறோம், என்றுள்ளார்.