முல்லைத்தீவு ஊடகவியலாளர்களை புறக்கணித்து வவுனியாவிலிருந்து ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்பு.!

breaking
வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது
இந்த ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு  விடுக்கப்படவில்லை
மாறாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டத்தின் அரச ஊடகவியலாளர் ஒருவருக்கு மாத்திரம் அழைப்பு விடுத்து ஏனைய வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களையும் அழைத்து இரகசியமான முறையில் ஊடக சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்று வருகின்றது
குறிப்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் வவுனியாவிலிருந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில ஊடகவியலாளர்களை அழைத்து  ஊடக சந்திப்பை நடத்தி வருவதாக முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
அத்தோடு குறித்த மாவட்ட முகாமையாளர் விமல் வீரவன்ச அவர்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் என்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களான மணலாறு பிரதேசத்தில் வெலிஓயா என்ற பெயரில் இடம்பெறுகின்ற சிங்கள குடியேற்றத் திட்டங்களில்  அதிகளவான வீட்டுத் திட்டங்களை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பதும் மக்களால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பலாம் என்ற காரணத்தினால் தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்கவில்லை என்ற சந்தேகத்தையும் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்