கள்ளுத்தவறணையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

breaking
  வடதமிழீழம்: உவவுனியா, கந்தன்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக இயங்கிவந்த களுத்த வறணையை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா, பூவரசங்குளம் கிராமர் சேவகர் பிரிவுக்குட்பட்ட கந்தன்குளம் சந்தியில் இயங்கி வரும் கள்ளுத்த வறணையினால் புலவர் நகர், குருக்கள் ஊர், கந்தங் குளம், பூவரசங் குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த கள்ளுத் தவறணையை உடனடியாக அகற்றக்கோரி இன்று (புதன்கிழமை) கந்தன்குளம் சந்தியில் பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ‘கந்தன் குள சந்தியை கள்ளுக்கடையாக்காதே’, ‘பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக கள்ளுக்கடை அமைப்பது முறையானதா’, ‘பாடசாலை போகும் வழியில் கள்ளுக்கடை வேண்டாம்’, ‘வேண்டாம் கள்ளுக்கடை வேண்டும் நூலகம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதேச செயலாளர் குறித்த கள்ளுத் தவறணையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.