சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை.!

breaking
தேர்தல் காலப்பகுதியில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு  இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிருவுடன், இடம்பெற்ற  கலந்துரையாடலின்போது தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களின் ஊடாக, அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக  ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார். அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு போலி முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.