Take a fresh look at your lifestyle.

பிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .!

தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு ” பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் தமிழியல் பட்டகர்களின் 5 ஆவது மாபெரும் ‘ அறிவாய்தல் அரங்கு ” நிகழ்வு.
15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.01 மணிக்கு கிறித்தே நகரில் நடைபெறவுள்ளது.

அகிம்சையின் குறியீட்டு நாடாவும், சனநாயகம் பேசும் பாரததேசத்திற்கு, ஈழத்தமிழனின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் அகிம்சைவழியில் தன் இன்னுயிரை ஈகம் செய்ய உண்ணா மறுப்புப்போராட்டத்தை தொடங்கிய நாள்தான் செப்ரெம்பர் 15 ஆகும்.
மூன்று தசாப்தங்கள் அல்ல முந்நூறு தசாப்தங்கள் சென்றாலும் உலகில் எவராலும் செய்ய முடியாதா அற்புத தியாகத்தை திலீபன் செய்துள்ளார். இந்த பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத தியாகம் இது.
வளர்ந்து வரும் எமது தலைமுறை இந்த தியாகத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருக்கின்ற மூத்ததலைமுறையினர் புரிந்து கொள்ளவேண்டும் அதை வரும் தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் மொழியில் பேசவேண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்ற வகையில் தமிழ்ச்சோலை பணியகத்தின் பேராசிரியர்கள் தமிழியல் பட்டதாரிகளை உருவாக்குதோடு அவர்கள் மூலம் பல காலத்தின் தேவையான தலைப்புக்களில் ஆய்வுகளையும், ஆழமான தேடுதல்களையும் செய்து ஒப்புவிப்பதோடு பிரென்சு மொழியிலும் அதனை வெளிவிட்டு வருகின்றனர்.  கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த அறிவாய்தல் அரங்கால் எமது பல தமிழ் இளையோர்களுக்கு பிரியோசனப்படுவது மட்டுமல்ல பிரெஞ்சு மாணவர்களுக்கும், ஏனைய பல்லின கல்வியாளர்க்கும் தமிழர் பற்றிய செய்தியையும் ஆதாரபூர்வமாக எடுத்துச்சென்றிருக்கின்றது.
இவ்வாறு காத்திரமான தூரநோக்குடன் செய்யப்படும் இவ் அறிவாய்தல் அரங்கானது தமிழ்உணர்வு கொண்ட அனைவரும் அறிந்தும் தெரிந்தும் பார்க்க வேண்டிதொன்றாகும்.

உலகம் வியக்கும் உன்னத மூத்த இனமாக அழியாது பல்லாயிரம் வருடமாக இருக்கும் நம் தமிழினம் அழியாது வழையடி வாழையாய் வாழவேண்டுமாக இருந்தால் எமது கல்விக்கு பின்னால் பெயருக்கும் பின்னால் கற்றுப்பெற்ற பட்டங்களை இட்டுக்கொள்வதோடு வளரும் இளந்தமிழ்த் தலைமுறைகளையும்,  உருவாக்க வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும் நிகழ்வில் சந்திப்போம்.

%d bloggers like this: