இந்தியாவில் இந்தி மட்டுமே மொழி அமித் ஷா சர்ச்சை பேச்சு.!

breaking
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் இந்தியா பல மொழிளை கொண்ட ஒரு நாடு. இங்கு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்று மிகவும் முக்கியமானது. நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும். ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். அவரவர் தாய்மொழியை பேசும் வேளையில் இந்தியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அது போல் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில் இன்று இந்தி தினம். நாட்டின் குடிமக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அதாவது நமது தாய்மொழியான இந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தியை திணிப்பதற்கு சமமாக உள்ளது. ஒரே மொழியாக இந்தியை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் என்றால் இத்தனை நாட்கள் இந்தியாவுக்கு அடையாளம் ஏதும் இல்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்புகள் எழும். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள இரு மொழி கொள்கைக்கு பதிலாக மும்மொழி கொள்கை கொண்டு வந்து அதில் இந்தியை திணிக்க மத்திய அரசின் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அது போல் அமித்ஷாவின் கருத்து தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.