கதவடைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை-முல்லைத்தீவு வணிகர் சங்கம்!

breaking
எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் நிகழ்விற்கு தமிழ்மக்கள் பேரவை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் எழுந்த மானத்திலான முடிவினால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அமைப்புடனும் எந்த தொடர்பும் பேணப்படவில்லை இன்னிலையில் பத்திரிகை ஊடாக அறிவித்துவிட்டால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது எனவே புதுக்குடியிருப்பு வணிகர்கழகம் முல்லைத்தீவு மாவட்ட வணிகர்கள் சார்பில் வணிக நிலையங்களை பூட்டுவதாக இல்லை என அறிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இன்று  14.09.19 புதுக்குடியிருப்பில் உள்ள வணிகர்கழக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் தலைவர் செ.செல்வச்சந்திரன் கழகத்தின்  செயலாளர் க.கோல்ரஜின் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
எதிர்வரும் 16 ஆம் திகதி யாழில் தமிழ்மக்கள் பேரவையின் எழுகதமிழ் நிகழ்விற்கு வடக்குமாகாண வணிகர்களின் கதவடைப்பிற்கு பத்திரிகை ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்கள் இதற்கு  புதுக்குடியிருபுபு வணிகர்கள் ஒத்துளைப்பு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அவர்க்ள தெரியிக்கையில் தமிழ்மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த வர்த்தக சங்கத்தினையோ பொது அமைப்புக்களையோ கருத்துக்கள் அல்லது எதையும் கேட்டதாக இல்லை  முல்லைத்தீவில் ஏனைய வர்த்தக சங்கத்தினை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்களிடமும் இதுவிடையம் குறித்து கதைக்கவில்லை என்றும் வெறுமென பத்திரிகைகளில் மாத்திரம் பார்த்துள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.
நேற்று 13.09.19 மாலை நடைபெற்ற புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் நிர்வாக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வர்தகர்களின் நலன் சார்த்து சிந்திகாமல் பத்திரிகைகளில் மட்டுமே வெளியிட்டுள்ளார்கள் கடந்த வெள்ளிக்கிழமை அரச விடுமுறைதினம் ஞாயிற்றுக்கிழமை வணிக நிலையங்கள் பூட்டு நடைமுறைக்கணக்கு வைத்துள்ள வர்த்தகர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையில் இருந்து வரும் காசோலைகள் அனைத்தும் திங்கட்கிழமைதான் வங்கிக்க்கு வரும் திங்கட்கிழமை கதவடைப்ப செய்தால் வர்த்தகர்கள் காசோலைக்கான பணத்தினை போடமுடியாத சூழல் எனவே எதிர்வரும் திங்கட்கிழமை கதவடைப்பு போராட்த்திற்கு வணிகநிலையங்களை மூட முடியாத சூழல் இருக்கின்றது.
வடமாகாணரீதியான கர்தால்களுக்கோ அல்லது முல்லைத்தீவு மாவட்டம்ரீதியான கர்தால்களுக்கு அழைப்பு விடும்போது வணிகர்களின் கருத்துக்களையும் கேட்டு நாட்களை தீர்மானித்து திகதிகளை அறிவிக்வேண்டும் என்று கோருவதுடன்
முல்லைத்தீவு மாவட்டம் போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த மாவட்டம் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு தீர்மானத்தினைந நிறைவேற்றுகின்றார்கள் தீர்மானிக்கின்றார்கள்
 எழுந்தமானத்தில் முடிவினை எடுக்கின்றார்கள் போராட்டத்தின் அனைத்து வலிகளையும் நாங்கள் அனுபவதித்து சொத்துக்கள் இழப்புக்களை சந்தித்த மாவட்டம் தான் முல்லைத்தீவு மாவட்டம் அனைத்து வணிகர்களும் வேதனையுடன் இருக்கின்றார்கள் வணிகர்களுடன் கதைக்கவில்லை என்று சொல்கின்றார்கள் இது எங்களுக்க வேதனையாக இருக்கின்றது. அனைத்து வலிகளையும் வேதனைகளையும் தாங்கி நின்றவர்கள்தான் முல்லைத்தீவு மாவட்ட மக்கள்.
யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற அரசியல் தலைமைகளின் குடும்பங்களோ,பிள்ளைகளோ உறவுகளோ இந்த போராட்டத்திற்கு போகப்போறது இல்லை கஷ்ரப்பட்ட ஏழை எளிய மக்கள்தான் போராட்டத்திற்கு முகம் கொடுக்கவேண்டும்
அவர்கள் அறிக்கை விடுவதற்க மட்டும்தான் தயாராக இருக்கின்றார்கள் இனத்தின் உரிமைக்ககாக கதைக்கவும் அறிக்கை விடமுடிமே தவிர வேறு எதுவும் அவர்களால் செய்யமுடியாது.
இந்த விடையத்தில் நாங்கள் எந்த அரசியல் கட்சியினையும் சார்ந்தவர்கள் இல்லை இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்விற்காவும் இதுவரைகாலம் செய்தோம் இனிமேல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்துபோவதற்கு தயாரா இருக்கவில்லை.
அரசியல் உரிமையினை பெறவேண்டிய தலைமை ஒன்று இருந்தது அந்த தலைமையின் ஊடாக இனத்தின் உரிமையினை பெறவேண்டிய காலம் இருந்தும் பெறமுடியவில்லை இனிவருங்காலங்களில் தமிழ் அரசியல் தலமைகள் எந்த தலைமைகளாக இருந்தாலும் அவர்களால் தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரமுடியாது ஜனநாயக வழியினால அரசியல்தீர்வுகளையே மக்களின் வாழ்அன்றாட வாழ்வியல் பிரச்சனையினை தீர்க்கத்தான் அவர்களால் முடியும் அதுகூட இங்கு நடைபெறவில்லை
இனி அரசியல் சாக்கடையில் விழுந்துவிடாமல் எங்களை மதிக்கின்ற எங்கள் மாவட்டத்தில் இருக்கின்ற பொது அமைப்புக்களையும் மதித்து  நடந்துகொண்டால் தவிர நாங்கள் இனத்திற்காக இனத்தின் வாழ்விற்காக உரிமைக்ககா எந்த விதத்திலும் முன்னின்று உழைக்க தயாராக இருக்கின்றோம்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வணிகர் கழகம் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வணிகர்கழகம் சார்பாகவும் நாங்கள் சொல்வது என்னவென்றால் எதிர்வரும் திங்கட்கிழமை கதவடைப்பினை ஏற்றுக்கொள்ளமுடியாது காரணம் இவர்கள் எங்களுடன் அணுகவில்லை,கதைக்கவில்லை,எங்களுடன் பேசவில்லை இதன் காரணத்தினால் புதுக்குடியிருப்பு வணிகர்கழக நிர்வாகம் கூடி முடிவொடுத்துள்ளோம் எதிர்வரும் திங்கட்கிழமை வாணிபங்கள் பூட்டப்பாடாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் வணிகர் கழக தலைவர் செ.செல்வச்சந்திரன் தெரிவித்துள்ளார்