தமிழீழத்தின் பகுதிகளை நோக்கி படையெடுக்கவுள்ள இன அழிப்பு சூத்திரதாரி கோத்தாவின் அரசியல் படைகள்

breaking
    இன அழிப்பு சூத்திரதாரி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தேடும் நோக்கில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 39 உறுப்பினர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்றுள்ளனர். கட்சியின் போஷகர் பசில் ராஜபக்ஷவின் ஆலோணையின் பேரில் சென்றுள்ள இவர்கள் மக்களை சந்தித்து ஆதரவை கோரவுள்ளனர். தேர்தல் வெற்றியினை இலக்காகக் கொண்டு நாளை திங்கட்கிழமையும் , நாளைமறுதினமும் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தமது பிரசார நடவடிக்கைளை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பார்கள். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ மீது இதுவரை காலமும் போலியான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் தவறான சித்தரிப்புக்களே காணப்படுகின்றன. இவ் விஜயத்தின் போது அனைத்து தவறான நிலைப்பாடுகளும் சீர்செய்யப்படும் என்பதும் பிறிதொரு நோக்கம் என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.