யாழ்.மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் இராணுவம், இன்று ஒருவா் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு..

breaking
யாழ்.சுன்னாகம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் ஒருவாின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓட முயற்சித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளாா். இராணுவத்தில் பணியாற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவரே இன்று ஞாயிறுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம், மானிப்பாய் மற்றும் அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுகளில் அண்மைக்கால இடம்பெறும் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் இராணுவத்தில் பணியாற்றும் மூவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது வீடொன்றுக்குள் புகுந்து பெண் ஒருவரை மிரட்டி சங்கிலி அறுத்துத் தப்பிக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் அபகரித்தது கவரிங் சங்கிலி. எனினும் சந்தேகநபர் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரா என்பது தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அவர் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.