ஶ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தன் செயற்பாடு ஊடாக நட்டம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட அன்நாட்டு பிரதமர் ரணில்

breaking
  விவசாய அமைச்சை டி.பி.ஜே. கட்டடத்துக்கு கொண்டுசென்றமை, பாராளுமன்ற செயற்குழுக்களை ' கொவிஜன மந்திர' வில் அமைத்தமை ஊடாகவும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பார்த்த இலக்குகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனதாக ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சியம் அளித்தார். அத்துடன் ஆணைக் குழுவில் முன்வைக்கபப்டும் விடயங்கள், சாட்சியங்கள் பிரகாரம் இந்த கட்டட விவகாரத்தில் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்வதாகவும் அவர் சுட்டக்கடடினார். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் துமிந்தா திசாநாயக்கவின் நடவடிக்கைகள் குறித்து யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் நடத்தைகளை சரிபார்க்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு என்று சாட்சியமளித்தார். 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்ப்ட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த அரசாங்கத்தின் விவசாய அமைச்சினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததும், ராஜகிரிய பகுதியில் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்ததுமான டி.பி.ஜே கட்டடம் தொடர்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரமே, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 21 மில்லியன் மாத வாடகைக்கு பெறப்பட்டுள்ள குறித்த கட்டடத்தால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாட்டின் மீதான விசாரணைகளின் போது இன்று பிரதமர் ரணில் விக்ரம சிங்க சாட்சியம் அளித்தார். கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்த போதிலும், மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றசில நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் அவர் அன்றைய தினம் ஆணைக்குழுவில் பிரசன்னமாகவில்லை. இதனையடுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்புக்கு அமைவாகவே இன்று பிரதமர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைகியிருந்தார். காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஆஜரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருமண சாட்சி கையெழுத்திடுவதற்கு கோரிய அனுமதியின் பிரகாரம் சுமார் இரு மணி நேர சாட்சியம் வழங்கிய பின்னர் முற்பகல் 11.20 இற்கு ஆணைக் குழுவில் இருந்து வெளியேறினார். பின்னர் மீள பிற்பகல் 1.30 மணிக்கு ஆணைக் குழு முன்னிலையில் பிரசன்னமான அவர் மாலை 4.30 மணி வரை சாட்சியமளித்தார்.