பதறிப் போன பாஜக ?அதிரடி காட்டிய வைகோ.?

breaking
ம.தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்தநாள் விழாவில்  கலந்துக்க வேண்டிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால்  தன்னை வீட்டுக்காவலில் மத்திய அரசு வைத்திருப்பதாக வீட்டு மாடியிலிருந்து மீடியாக்களிடம் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பரூக் அப்துல்லாவுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்றும், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிய வேண்டும் என்றும்  ம.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் தாக்கல் செய்து பா.ஜ.க.வை அதிர வைத்துள்ளார் வைகோ. அதே போல் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.சபை கவனித்து கொண்டிருக்கும்  இருக்கும் நேரத்தில், தமிழகத்தில் இருக்கும்  கட்சிகள் தொடர்ச்சியாக காஷ்மீர் ஆதரவாக செயல்படுவதையும் மத்திய பாஜக அரசு கவனித்து வருகிறது. மேலும் காஷ்மீரில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. எச்சரிச்சிருக்கை விடுத்துள்ளது. அதோடு, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை மோடி அரசு பறித்தது தவறு என்று கண்டனம் தெரிவித்து, டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தற்போது ம.தி.மு.க.வும் பரூக் அப்துல்லா தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, காஷ்மீர் விவகாரத்தை நினைவுப்படுத்தி வருகிறது.