3 ஆவது நாளாகவும் தொடரும் இ.போ.ச வினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

breaking
  வடதமீழீழம்: வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் (18.09.2019) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர். இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30 , 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போராட்டத்திற்கு செப்டேம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் நேற்று முன்தினம் (16.09.2019) காலை ஆரம்பித்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவதுத நாளாகவும் இன்றும் தொடர்கின்றது. இதற்கு ஆதரவு வழங்கும் ரீதியில் வவுனியா சாலை ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூர இடங்களில் இருந்தும் கிராம பகுதிகளில் இருந்தும் வவுனியா நகருக்கு வந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.