புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை, பொலிஸார் தேடுதல்

breaking

வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், முகாம்களை மூட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வப்போது தேடுதல் சோதளை நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுவதாகக் குற்ற்ம் சுமத்தப்படுகின்றது. வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியே இலங்கைப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைக ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரிடம் அனுமதி பெற்ற பொலிஸார் விற்பனை நிலையத்துக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு ஆயுதங்கள் எதுவும் இருந்ததாகக் கூறப்படவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சிலரை பொலிஸார் செய்தி சேகரிக்கவோ படம் எடுக்கவோ அனுமதிக்கவில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள பழைய இரும்பு நிலையத்திலேயே பொலிஸார் இல்ங்கை விசேட அதிரடிப்படையினரோடு இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இவ்வாறு தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் முன்னாள் போராளிகள், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.