அரசியல் கைதிகளை விடுதலை செய்ய யேர்மனியில் முன்னெடுக்கப்பட்டது.!

breaking
தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாட்களை முன்னிட்டு , அவரின் கோரிக்கைகளில் ஒன்றான “அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் “ எனும் கோரிக்கையை முதன்மை கருப்பொருளாக கொண்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை, இலங்கையில் அரசியல் கைதிகள் குறித்த நிகழ்வு Oberhausen நகர இடது சாரி கட்சியின் மையத்தில் நடந்தது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட லண்டன் மனித உரிமை வழக்கறிஞர் தர்ஷா ஜெகதீஸ்வரன் அவர்கள் இலங்கையில் சிறைச்சாலை நிலைமைகள் தொடர்பாகவும் மற்றும் சிங்கள பேரினவாத அரசால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் , அவர்களின் உறவுகள் மேற்கொள்ளும் தொடர்போராட்டங்கள் தொடர்பாகவும் விளக்கம் அளித்தார் . இவ் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நடைபெறவிருக்கும் தொடர் விவாதங்களில் , ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க , குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 1000 நாட்களை அண்மிக்க இருக்கும் நிலையில் தொடரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசத்திலும் தோழமை போராட்டங்களை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர்.