வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களினால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

breaking
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களின் சங்கத்தினரால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பிரதேச சபைக்கு முன்பாக சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட 29 சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட சிறுவர்களது ஒளிப்படங்களுடன் கூடிய விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றும் திருகோணமலை மாவட்ட முழுநேரர ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் லக்மால் பதுகேவிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  சங்கத்தின் செயளாளர் பி.சர்மிளா, கடந்த பத்து வருடகாலமாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி பலதரப்பட்ட போராட்டங்களை தாம் முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை தமக்கான சிறந்த தீர்வு இலங்கை அரசினால் வழங்கப்படவில்லை என்றும் தமிழ் அரசியல் தலைமைகளும் தம்மை புறக்கணித்து வருவதால் தாம் சர்வதேசத்தை நாடுவதாகவும் தெரிவித்தார்.