கடற்கரும்புலி மேஜர் அருமை, கடற்கரும்புலி கப்டன் தணிகை வீரவணக்க நாள்.!

breaking
கடற்கரும்புலி மேஜர் அருமை, கடற்கரும்புலி கப்டன் தணிகை வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு கடற்பரப்பில் 02.10.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் “ரணகஜ” எனும் தரையிறங்குகலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அருமை, கடற்கரும்புலி கப்டன் தணிகை ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் மற்றும் லெப். கேணல் இளநிலா  உட்பட ஏனைய (05) மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலைக்கு வித்திட்டு கடலன்னை மடியில் கரைந்த உயிராயுதம் இவர்களுடன் கடலிலே காவியம் படைத்தவர்கள்…!     லெப்.கேணல் இளநிலா (செல்வராசா அனுராஜினி – இராமநாதபுரம், கிளிநொச்சி) கப்டன் சுஜீவன் (யோகராசா) (இராசரத்தினம் இராஜேந்திரன் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் அமுதன் (ஏகாம்பரம் குலசிங்கம் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர்.     தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”