பரபரப்பு தொற்றிக்கொள்ளும் ஶ்ரீலங்கா அரசியல்: சஜித் மைத்திரி திடீர் சந்திப்பு

breaking
  ஶ்ரீலங்கா: ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறும் என அறிய முடிகின்றது. பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு இணைக்கப்படும் எட்டப்படவில்லை இவ்வாறு நீண்ட நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடான ஒரு சூழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இருப்பினும் சஜித் -மைத்திரி சந்திப்பு எப்போது இடம்பெறும் என்பதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.