முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களிற்கு வாரி இறைக்கப்படும் பணம்: அனுரகுற்றச்சாட்டு

breaking
தற்போதை ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதை ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் சுககோகங்களுக்குக் கூட இந்த அரசாங்கம்தான் நிதி வழங்குகின்றது. வாகனம், உணவு உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளுக்கான செலவீனங்கள் அனைத்துக்கும் அரசாங்கத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிதி கிடைக்கின்றது. இவையனைத்துக்கு ஒரு முடிவுக்கட்டப்பட வேண்டும். அதாவது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படுகின்ற அரசாங்க நிதியை நிறுத்த வேண்டும். இல்லாவிடின் முன்னாள் ஜனாதிபதிக்கு இருப்பதற்க்கு கூட இடமில்லை, வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு வழியில்லை என்றால் மாத்திரம் குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் வழங்குவது சிறந்தது. இவ்வாறான காரணங்கள் ஏதுமின்றி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகள் ஏதும் வழங்கக்கூடாது. மேலும் நாட்டின் அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் மோசடி மற்றும் ஊழல் செய்த அனைவருக்கும், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.