சட்டத்தை மீறி செயற்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக: மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரிக்கை

breaking
சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் ஞானசார தேரரையும், நீதிமன்ற உத்தரவைமீறி செயற்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரித்திருக்கிறது. அத்துடன் இத் தருணத்தில் உரிய நடவடிக்கையை எடுக்காமலிருப்பதென்பது, தவறான நடத்தையை அங்கீகரிப்பதாகவும், தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் கலாசாரத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். அது எதிர்கால முரண்பாடுகளுக்கான அடிப்படையாக அமைவதுடன், இலங்கையில் இனத்துவ உறவுகளை மேலும் இடர்ப்பாடுகளுக்கு உட்படுத்தும் என்றும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.