குர்திஸ் போராளிகளின் விநியோக பாதையை இலக்குவைத்து விமானதாக்குதலை ஆரம்பித்தது துருக்கி-வீடியோ இணைப்பு.!

breaking
சிரியாவின் வடகிழக்கு பகுதியில்  உள்ள குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈராக் சிரிய எல்லையில் உள்ள குர்திஸ் போராளிகளின் விநியோக பாதையொன்றில் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. வடஈராக்கிலும் சிரியாவிலும்  குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்கும் பாதையில் குர்திஸ் போராளிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக துருக்கி விமான தாக்குதல்களை மேற்கொண்டது என இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செமல்க எல்லை பகுதியிலேயே விமானதாக்குதல்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் குர்திஸ் பகுதிகளை இலக்குவைத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஈராக் சிரியாவிற்கு இடையே குர்திஸ் ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தும் பாதையை துண்டிப்பதே துருக்கியின் தாக்குதலின் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. [video width="636" height="380" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/10/636x382_MP4_3010323582737793894.mp4"][/video]