இனப்படுகொலையாளன் கோட்டாவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்.!

breaking
பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு பொலிஸ் தலைமையகத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி குறித்த இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அண்மையில் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையிலேயே தமக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக குறித்த இருவரும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு முறைப்பாடு செய்ததன் பின்னர் பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். ‘தாக்குதல் மற்றும் வெள்ளை வான் ஆகியவற்றை நினைவுபடுத்தல், வியங்கொட என்ற பெயருக்குப் பதிலாக எக்னெலிகொடவின் பெயரை நினைவுபடுத்தல் ஆகிய விடயங்கள் எனக்கும் காமினிக்கும் எதிராக இடம்பெறுகின்றன. இயற்கை உயிரிழப்பு கிடைக்காமை குறித்து கவலையடைவதாகவும் கூறப்படுகின்றது. நாம் முன்னெடுக்காத மற்றும் எம்மால் பதிலளிக்க முடியாத விடயங்கள் குறித்து அவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர். பிரஜைகளின் உரிமைக்காகவே நாம் செயற்பட்டோம். அந்தப் பிரஜைக்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், அதனை நீதிமன்றத்திலோ அல்லது வேறு எங்குமோ கேட்க முடியும். நாம் நீதிமன்றத்தை நாடியமை குறித்தே இங்கு பிரச்சினையுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.