கோட்டாவின் மேல் வழக்கு தொடுத்தவர்களிற்கு உயிர் அச்சுறுத்தல்

breaking
  ஶ்ரீலங்கா: கோத்தாபயவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்த விவகாரம்தொடர்பில் நீதிமன்றில் எழுத்தாணை மனுத்தாக்கல் செய்த காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகி­யோர் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்து குற்றப்பு புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் 'செட்­டி­யோ­ராரி' எழுத்­தானை மனுவை தாக்கல் செய்தமைக்காக தாம் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகி­யோர் குற்றப்பு புலனாய்வுப் பிரிவினர் என்ற அழைக்கப்படும் சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்துள்ளனர். இவ்வாறு மரண அச்சுறுத்தலை எதிர்கொள்வதானது வேள்ளை வேன் காலாசாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும், அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் உருவாகுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.