வெறுங்கையால் முழம் போடும் ஶ்ரீலங்காப் படைகள்

breaking
  இன அழிப்பு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தங்கம் , ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது . முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவம் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை . கடந்தவாரமும் இதே பகுதியில் இரண்டு தடவை அகழவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் நிறைவடைத்திருந்தது . இந்த நிலையில் மீண்டும் இன்றையதினம் அகழ்வு மேற்கொண்ட போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை .என்பது குறிப்பிடத்தக்கது.