Take a fresh look at your lifestyle.

பிற்பகல் கைதானவர் இரவு மரணம்: காவல் நிலையத்தில் குவிந்த உறவினர்கள் (காணொளி)

 

வடதமிழீழம்: நெல்லியடி பொலிஸார் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப வன்முறை தொடர்பாக மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்த, துன்னாலையை சேர்ந்த ரூபன் (40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதனால் தற்போது நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ள உறவினர்கள், பொலிசாரின் தாக்குதலாலேயே அவர் உயிரிழந்தனர் என குற்றம்சாட்டி வருகிறார்கள்.

எனினும், பொலிசார் அதனை மறுத்துள்ளனர். தாம் கைது செய்தபோதே அவர் அலரி விதை உட்கொண்டிருந்ததாலேயே அவர் உயிரிழந்தமைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தும் அவர் வரவில்லை. நேற்று மாலை அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். இரவு 10 மணிக்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு கொண்டிருந்தபோது வாந்தியெடுத்தார். அப்போதுதான், தான் அலரிவிதை உட்கொண்டதை தெரிவித்தார். உடனடியாக அவரை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கு இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

%d bloggers like this: