ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்கொள்வதற்கு கோத்தா தயங்குவது ஏன்? - முஜிபுர் கேள்வி

breaking
சஜித் பிரேமதாச பல்வேறு ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தியதுடன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார். ஆனால் கோத்தா ராஜபக்ஷ இன்னமும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை எதிர்கொள்வதற்கு முன்வராதது ஏன்? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பேசினால், அதன்பின்னர் அவர்களுடைய தேர்தல் திட்டம் முழுமையாக சிதைந்துவிடும். அதனாலேயே அவரை ஊடகவிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு எதிரணியினர் அஞ்சுகின்றனர் என்றும் அவர் கூறினார். ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷ தான் ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்வேன் என்று அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதாகவே அவர் கூறுகின்றார். எனவே நீதிமன்றம் முழுமையாக அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்பதையே அவர் இக்கருத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்