ஶ்ரீலங்கா கடற்படையால் கஞ்சா பொதிகள் மீட்பு

breaking
  வடதமிழீழம்; மன்னார் கடலில் நேற்று மிதந்து கொண்டிருந்த நிலையில் கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் காணப்பட்டன, இந்நிலையில் மன்னாரில் இருந்து கடல்களில் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது இரண்டு பொதிகளில் 86.520 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக சந்தேகநபர்கள் கேரள கஞ்சாவை வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தார். மீட்கப்பட்ட கேரள கஞ்சாத்தொகை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.