கோத்தாவின் அண்ட புழுகல்.?

breaking
இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக  இனப்படுகொலையாளன்  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்   இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போரின்போது சரணடைந்த 13,784 பேரை, புனர்வாழ்வளித்து விடுதலை செய்துவிட்டோம் எனவும் எவரையும் தடுப்புக்காவலில் வைக்கவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை இராணுவத்தினர் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் போரின்போது காணாமல் போனவர்கள் என கருதப்படுவோர் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளோம் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அண்மையில் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளித்த இராணுவத் தரப்பு, விடுதலைப் புலிகள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லையெனவும் அரசாங்கத்திடமே சரணடைந்தனர் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.