கொள்ளையிடும் நோக்கத்துடன் குத்திக்கொன்று எரித்தேன்: மனசை பதற வைக்கும் கொலையாளியின் வாக்குமூலம்

breaking
  கொள்ளையிடும் நோக்கத்துடனேயே முச்சக்கரவண்டியின் சாரதியை கொலை செய்யதாக கள்ளிக்குளத்தில் கொலை செய்யப்பட்ட முற்சக்கரவண்டியின் சாரதியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கைது செய்யப்பட்ட முருகனூரைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 24 வயதுடைய நபரே இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பணத் தேவைக்காக கொள்ளையிடும் நோக்கத்துடனனேயே கொலை செய்திருந்தேன். முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் காணப்பட்ட சங்கிலியை எடுப்பதே நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக கொள்ளையிடும் நோக்கத்துடனேயே கத்தி போன்ற பொருட்களை வாங்கி வைத்திருந்தேன். முச்சகரவண்டி சாரதியை கொலை செய்யவேண்டுமென்றல்ல, யாரையாவது கொலை செய்து அவர்களிடம் உள்ள பணம் நகைகளை கொள்ளையிட வேண்டும் என்பதே நோக்கம். குறித்த தினத்தில் கத்தியை எடுத்து வந்தபோது கோவில்குளம் சந்தியில் உள்ள தரிப்பிடத்தில் அந்த முச்சக்கரவண்டி சாரதி நின்றார். உடன் அவரை சந்தித்து தொலைபேசி இலக்கத்தினை பெற்றுக்கொண்டு சென்றிருந்தேன். மாலை நேரமானதும் முச்சக்கரவண்டி தேவை போகவேண்டும் என தெரிவித்ததையடுத்து முச்சக்கரவண்டியை அவர் கொண்டு வந்தார். இதற்கு முதலும் மாலை 7 மணியளவில் நெடுங்கேணிக்கு அந்த முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்றிருந்தேன். எனினும் கொலை செய்வதற்குரிய இடம் அமையவில்லை. இதனால் பெண்ணொருவர் வருவதாக கூறினார், எனினும் அவரது தொலைபேசி இயங்கவில்லை எனவே செல்வோம் என கூறி மதியாமடு பாலத்துடன் திரும்பி வவுனியா வந்துவிட்டோம். கொடுப்பதற்கு பணம் இல்லை என்பதால் ஈசி காஸ் போடுவதாக கூறியிருந்தேன். பின்னர் அதனை செலுத்தவில்லை. கள்ளிக்குளத்தில் முன்பு டோசர் வேலை செய்ததனால் அந்த இடம் நன்கு தெரியும். அதனால் 9ம் திகதி என்னிடம் பம் இருக்கிறது வா என தெரிவித்து பணம் தருகின்றேன், நான் தற்பொது கொழும்பு செல்ல வேண்டும் ஈரப்பெரியகுளத்தில் விடுமாறு தெரிவித்தேன். போகும் வழியில் பெண்ணொருவர் கள்ளிக்குளத்திற்கு வந்துள்ளார், கள்ளிக்குளம் போவோமா என கேட்டேன். அவரும் சரி என முச்சக்கரவண்டியை கள்ளிக்குளத்திற்கு செலுத்தினார். அங்கு சென்றதும் மண் குவாரி இருக்குமிடத்திற்குத்தான் அந்த பெண் வரும் அந்த இடத்திற்கு விடச்சொன்னேன். அங்கு சென்றதும் முச்சக்கரவண்டியை சற்று உள்ளே தள்ளி விடச்சொன்னேன். அவர் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு என்னை திரும்பி பார்க்கும்போது கத்தியால் கழுத்தில் வெட்டினேன். கத்தி உடைந்துவிட்டது. அவர் ஓடினார். நான் துரத்தி சென்றேன். உடன் அவர் சங்கிலி மற்றும் தன்னிடம் இருந்த பொருட்களை கழற்றி எறிந்தார். பின்னர் விழுந்து விட்டார். அதன் பின்னர் கழுத்தை நெரித்து கொன்றேன். அதன்பின்னர் வந்து முச்சக்கரவண்டியில் இருநத போத்தலை எடுத்து பெற்றோலையும் பக்கவாட்டிற்கு போடப்படும் துணியையும் முச்சக்கரவண்டியிலேயே எடுத்து அவரின் மேல் போட்டு எரித்தேன். அங்கிருந்து கொழும்பு சென்று அங்கிருந்து மாத்தறை ஹட்டன் போன்ற இடங்களுக்கு சென்றேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். இந் நிலையில் சந்தேக நபர் மீண்டும் வவுனியாவிற்கு வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் ஈரப்பொரியகுளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.