மசூதியில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு!

breaking
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றினுள் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஹஸ்கா மினா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் முபரேஸ் அட்டால் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக எந்த அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நங்கர்ஹார்  மாகாணத்தில் செயற்பட்டுவரும் தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன