கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் .!

breaking
கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திருமாறன் / சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 18.10.1997 அன்று மாலையிலிருந்து தொடர்ந்த கடற்சமர் 19.10.1997 அன்று வரை நிடித்தது, அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் P 462 டோறாவை மூழ்கடிக்கப்பட்டது. வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!   இவர்களுடன் கடலிலே காவியம் படைத்தவர்கள்……..! மேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் – ஆயித்தியமலை, மட்டக்களப்பு) கப்டன் பரமு (கந்தையா சுதாகரன் – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) கப்டன் நவநீதன் (தங்கவேலாயுதம் சிவானந்தம் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)   தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”