Take a fresh look at your lifestyle.

உழவு இயந்திரத்தை செலுத்த பழகிய இளம் தாய் மரணம்

வடதமிழீழம்: வவுனியா – பம்பைமடு, பெரியகட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.

குறித்த உழவு இயந்திரத்தை பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் திரும்ப முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி முற்றாக குடைசாய்ந்துள்ளது.

உழவு இயந்திரத்தில் பயணம் செய்த கணவன் தூக்கி வீசப்பட்டதுடன், மனைவி உழவு இயந்திரத்தின் கீழ் பகுதியில் சிக்கியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் ம ரணமடைந்துள்ளதாகவும், கணவன் சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரியவருகிறது. விபத்தில் பெரியகட்டுபகுதியை சேர்ந்த தனுசா (வயது 21) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணே உழவு இயந்திரத்தை செலுத்தியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்