சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடரும்.!

breaking
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் கேரள மற்றும் கர்நாடக மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல்  சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.   கிண்டி, அசோக் நகர்,  வடபழனி, கோயம்பேடு,கோடம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரியில் பெய்துவரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.