சிங்கள ஒட்டுக்குழு நிகழச்சி நிரலில் இயங்கும் இயக்குனர் லெனின் பாரதி .?

breaking
மேற்குத் தொடர்ச்சி மலை என்ற கவனம் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. இவர் அண்மையில் இலக்கிய நிகழ்வொன்றிற்காக இலங்கை சென்றிருந்தார். அந்த இலக்கிய நிகழ்வு  தமிழீழ மக்களை  படுகொலை செய்தும்   இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுடைய இயக்கங்களை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது. குறித்த இலக்கிய நிகழ்வுக்கு சென்ற லெனின் பாரதி  ஒட்டுகுழு  டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களும் சிங்கள ஒட்டுகுழு ஈபிடிபி  குழுவை  சேர்ந்த கவிஞர்களுமான கருணாகரனும் சுகனும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர். கருணாகரன் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து இம்முறை தேர்தலில்  இனப்படுகொலை  கோத்தபாயே ராஜபக்சேவை ஆதரிக்கின்றார். அத்துடன் டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளுக்கு எதிராக் செயற்பட்டு போராட்டத்தை காட்டிக் கொடுத்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களை தனது ஆயுதப் படையால் படுகொலை செய்தவர். இவரது ஆதரவாளராக செயற்படும் எழுத்தாளர் கருணாகரன் இந்த இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் ஈழ எதிர்ப்பு தமிழக கம்யூனிஸ்ட் சிராயுதீனும் இந்த சந்திப்பில் டக்ளசை சந்தித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துப் பாராட்டிய இயக்குனர் லெனின் பாரதி எழுத்தாளர்கள், கலைஞர்களை படுகொலை செய்த டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்திருப்பது தமிழக மற்றும் ஈழத்து எழுத்தாளர்களை பெரும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியது.