நகர முடியாமல் திணறும் விமானம்.?

breaking
பயணிகள் விமானம் ஒன்று நடுரோட்டில் மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.சீனாவின் ஹார்பின் என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றுக்கு அடியில் பயணிகள் விமானம் ஒன்று சிக்கிக்கொண்டது. வீடியோவில் முதலில் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் மிகப்பெரிய ட்ரக் ஒன்றில் விமானத்தை ஏற்றிச்செல்லும் போது அந்த ட்ரக் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது தெரிகிறது.
[video width="360" height="360" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/10/y2mate.com-airplane_stuck_under_footbridge_removed_by_witty_driver_UQd-dqPknGw_360p.mp4"][/video]
புதிதாக உற்பத்தியாகி அசெம்பிள் செய்யப்படாத விமானத்தை மீட்க பல ஊழியர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் ட்விட்டரில் இந்த வீடியோவை சுமார் 27 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
கூகுள் மேப் பார்த்து பயணித்தால் இப்படித்தான் ஆகும் என ட்விட்டர் வாசிகள் சிலர் கேலி செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ இதுதான் சீனா என்று விமர்சித்து வருகின்றனர்.