

கவிஞர் வைரமுத்து குழந்தை சுர்ஜித்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நான்கு நாள்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், குழந்தை சுர்ஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதிகாலை 4.30 மணியளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுர்ஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து சுஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
சுர்ஜித்தின் உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையிலேயே கவிஞர் வைரமுத்து குழந்தை சுர்ஜித்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.