அதானிக்கு மீனவர்கள் விடுத்த எச்சரிக்கை .?

breaking
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவிலுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் தற்போது இயங்கி வரும் அதானி துறைமுகத்திற்கு அருகிலேயே 53,031 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகமும் தொழில் பூங்காவும் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். காட்டுப்பள்ளியிலுள்ள அதானி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து, பழவேற்காடு மீனவர்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். `கரைக்கடல், சதுப்பு நிலங்கள், ஏரிப்பகுதி, கொற்றலை ஆற்றின் ஒரு பகுதி என்று பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து சுமார் 6,200 ஏக்கர் பரப்பளவில் நடக்கவுள்ள அதானி நிறுவனத்தின் திட்டம், மீனவர்களின் மீன்பிடிப் பகுதிகளை முற்றிலுமாக அழித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தையே நாசமாக்கிவிடும். மீனவர்களுடைய வாழ்வைச் சிதைக்கும் இந்தத் திட்டம் வரக்கூடாது' என்று இன்று காலை பத்து மணிக்குப் பழவேற்காடு, லைட் ஹவுஸ், தாங்கல் பெரும்புலம் ஊராட்சிப் பகுதியிலுள்ள மீனவ மக்கள் அனைவரும் கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ``திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவிலுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் தற்போது இயங்கி வரும் அதானி துறைமுகத்திற்கு அருகிலேயே 53,031 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகமும் தொழில் பூங்காவும் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். மீனவ மக்களுக்கு எதிரான இந்தத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். அதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். இந்தப் போராட்டம் இதோடு நிற்காது. மீன் பிடித்தல் மீனவர்களின் உரிமை. எங்கள் உயிரைக் கொடுத்தாவது எங்கள் உரிமையைப் பாதுகாப்போம்" என்று ஆர்ப்பாட்டத்தின்போது பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் பிரதிநிதியாக முன்நின்று பேசியவர்களில் ஒருவரான மீனவர் ராஜேந்திர நரசிம்மன்.   [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/10/திருவள்ளூர்-மாவட்டம்-பொன்னேரி-தாலுகாவிலுள்ள-காட்டுப்பள்ளி-கிராமத்தில்-அதானி.mp4"][/video] நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக, பழவேற்காட்டில் அனைத்துக் கடைகளும் மீனவச் சந்தையும் அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.