மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி: வவுனியாவில் பல இடங்களில் மின்சாரத்தடை

breaking
  வடதமிழீழம்: வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று மாலை மின்சாரசபை ஊழியர்கள் மீது அப்பகுதியிலுள்ள குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் தொழிலினை மேற்கொள்ளச் சென்ற ஆறுபேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 42 கிராமங்களுக்கு நேற்று முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில், நேற்று மாலை வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் மின்சார வேலையிநிமித்தம் அங்கு சென்ற ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதன்போது மின்சார சபை ஊழியர்கள் ஆறுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசிகுளம், கோவில்குளம், சிதம்பரபுரம் கிராம அலுவலகர் பிரிவை உள்ளடக்கிய சுமார் 42 கிராமங்களுக்கு இதனால் மின்தடை நேற்று முதல் ஏற்பட்டுள்ளது. மின்சார சபையின் பணிகளை மேற்கொள்ளச் சென்றவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள குழுவினர் இன்று காலைவரையும் பொலிசாரால் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்து இன்று காலை முதல் மின்சார சபை ஊழியர்கள் பணிப்பறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 42 கிராமங்களில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.