தமிழ் மன்னர் ராஜராஜ சோழன் 1034வது சதய விழா.!

breaking
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா செவ்வாய்கிழமை மங்கல இசையுடன் தொடங்கியது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய கோவிலில் தமிழக அரசு சார்பில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 1034வது ஆண்டு சதய விழா இன்று மங்கள இசையுடன் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் அணணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் பின், ராஜராஜசோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது. ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் புகழோடு விளங்கும் மாமன்னர் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.