கிளிநொச்சி CSD யினரிடம் கள்ள வாக்கு செலுத்த கோரிய கோத்தா: உடன்படாதவர் பணி நீக்கம்

breaking
  இரணைமடுவில் அமைந்திருக்கும் சிவில் பாதுகாப்பு படை முகாமுக்கு சென்ற இன அழிப்பு சூத்திரதாரி கோத்தா சிவில் பாதுகாப்பு படையினர் 40000 கள்ள வாக்குகளை தனக்கு போடுமாறும் அது தன்னை வெற்றி பெற வைக்கும் என கூறியதுடன் வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியிருப்பதுடன் அதை எதிர்த்து கேள்வி கேட்ட முன்னாள் போராளியின் வேலையை நிறுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார் ஶ்ரீலங்கா தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பான கட்டத்தை அடைத்திருக்கிறது .தமிழர்களின் வாக்குகளிலேயே தாங்கள் வெற்றி பெறமுடியும் என்பதை பிரதான வேட்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழீழ பிரதேசங்களில் பிரதான வேட்பாளர்களும் பரிவாரங்களும் ஒட்டுக்குழுக்களும் வாக்குச் சேகரிப்பில் களம் குதித்துள்ளன. மகிந்த ஆட்சியில் இருந்தபோது முன்னாள் போராளிகளை தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பதற்கும் தங்களது அரசியல் தேவைகளிற்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு துணை இராணுவ அமைப்புதான் இந்த சிவில் பாதுகாப்புப் படை இந்த இராணுவ பிரிவின் உறுப்பினர்கள் முன்பள்ளிகளை நடத்துதல் பண்ணைகளில் வேலை செய்தல் ஶ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளிற்கு  சேவகம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நேற்றைய தினம் இரணைமடுவில் உள்ள சிவில் பாதுகாப்பு படையிரின் முகாமிற்கு முன்னறிவிப்பின்றி சென்ற கோத்தபாய அவர்கள் மத்தியில் உங்களிடமிருந்தும் உங்கள் குடும்பங்களிலிருந்தும் 40000 வரையான கள்ள வாக்குகளை எதிர் பார்ப்பதாக கூறியதுடன் தான் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது உறவினர்களிற்கும் அரசாங்க வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். இதே வேளை இவ் விடயத்திற்கு உடன்படாது கருத்து தெரிவித்த முன்னாள் போராளியை கோத்தாவின் பரிந்துரையின் பெயரில் 5வருட பணிநீக்கம் செய்துள்ளது சிவில் பாதுகாப்புப் படை.