கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கட்டளை அதிகாரி கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் ஆகிய கடற்கரும்புலி உட்பட ஏனைய மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளாலிப் பகுதியில் 09.11.2001 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பருத்தித்துறை – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006 அன்று சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் லவனிதா, கடற்கரும்புலி கப்டன் சாந்தினி, கடற்கரும்புலி லெப்டினன்ட் அகவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”