Take a fresh look at your lifestyle.

முன்னாள் ஶ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினரின் நினைவுதினம் வவுனியாவில்

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் நினைவு தினம் இன்று (09) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மூத்த சட்டத்தரணியும் மாவட்ட அபிவிருத்திச்சங்கத் தலைவரும் அமரர் சிவசிதம்பரத்தின் திருவுருவச்சிலையை நிறுவியவருமான முருகேசு சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.தணிகாசலம் , நகரசபை உறுப்பினர்கள், தமிழ்மணி அகளங்கன், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியாத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது. வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலத்தினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.