Take a fresh look at your lifestyle.

ஐ தே கவில் இணைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியாவில் பிரச்சார கூட்டம்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் வவுனியாவில் ஆரம்பமானது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் முத்துராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் புளொட் அமைப்பின் தலைவல் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டிருந்தார்.

இது வரை டக்ளஸ் கருணா போன்ற ஒட்டுக்குழுத்துரோகிகள் செய்து வந்த வேலையை இன்று அப்பட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பது மக்களிடையே அதிர்பிதியை ஏற்படுத்தி இருக்கிறது.