Take a fresh look at your lifestyle.

மாவீரர்களை நினைவுகூர தயாராகும் தமிழீழமும் ,புலம் பெயர் தேசமும்

மாவீரர் நினைவு நாள் பணிகள் தமிழர்தாயகமெங்கும் உணர்வெழுர்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 27/11/2019 உலகில் தமிழர் நிரம்பி வாழும் நிலப்பரப்பெங்கும் உணர்வுபூர்வமாக  நினைவு கூரப்படப்போகின்ற மாவீரர் நாள்
நிகழ்வுகளுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் மட்/மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டுநகரில் அமைந்துள்ள மாவீரர்துயிலுமில்லங்கள் நினைவு நாளுக்கு தயாராகிவருகின்ற அதேவேளை தமிழர் தாயகம் ,மற்றும் புலம் பெயர் தேசம் ,தமிழ் நாடு என தமிழர் வாழும் நிலமெல்லாம் மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிக்க தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.