துபாயில் நடைபெற்ற 5 கிமீ ஓட்டப் பந்தயத்தில் இந்திய மூதாட்டிகள் வெற்றி.!

breaking
துபாயில் நேற்று முன்தினம் ஓட்டப்போட்டி நடைபெற்றது. வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கும் வகையிலான இந்த ஓட்டப்பந்தயத்தில் பலர் பங்கேற்று ஓடினர். இதில் குசும் பார்கவா (86), ஈஸ்வரி அம்மா  ஆகிய இரு மூதாட்டிகள் பங்கேற்று ஓடி வெற்றி இலக்கை அடைந்தனர். வெற்றி பெற்ற பார்கவா இந்த போட்டியில் பங்கேற்றவர்களில் மிக மூத்த வயதான மூதாட்டி. இவரும் இவரை அடுத்து வெற்றி இலக்கை எட்டிய ஈஸ்வரி அம்மாவுக்கும் 78 வயதாகிறது. இந்தியாவை சேர்ந்த இருவரும் தள்ளாமையால் வீல் சேரில் அமர்ந்தபடி தங்களது இலக்கை அடைந்தனர். இது தொடர்பாக பார்கவா கூறுகையில், `‘5 கிமீ தொலைவு ஓட்டப்பந்தயத்தில் நான் வெற்றி பெற காரணமாக இருந்தவர் எனது மருமகள் தான். வெற்றி பெற்றதை தொடர்ந்து என்னுடன் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது என்வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்,’’ என்றார். சார்ஜாவில் வசிக்கும்  இந்திய மூதாட்டியான ஈஸ்வரி அம்மா தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள், மருமகள்களுடன் ஓடினார். அவரை வீல்சேரில் அமரவைத்து அவரது குடும்பத்தினர் வெற்றி கோட்டை நோக்கி தள்ளி சென்றனர். தனது வெற்றி குறித்து ஈஸ்வரி அம்மா கூறுகையில், ‘`பல்வேறு கலாசாரத்தை பின்பற்றும் நாட்டினருடன் ஓடிய இனிய அனுபவமாக அமைந்தது,’’’ என்றார்.